கல்வி கண்காட்சி மற்றும் பயிற்சி
கல்விக் கண்காட்சி மற்றும் பயிற்சிக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய இயலவில்லை வீட்டிலிருந்து உணவு எடுத்துவருவது குறித்து கருத்து கேட்டிருந்தேன்.
பெரும்பான்மையான தன்னார்வலர்கள் (65% சதவீதம்) வீட்டிலிருந்து மதிய உணவு எடுத்து வர கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட சதவீத தன்னார்வலர்கள் உணவு எடுத்து வர இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையினர் கருத்தை ஏற்று கீழ்க்கண்ட முடிவுகள் அறிவிக்கபபடுகின்றன.
1) கல்விக் கண்காட்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல் படி நடைபெறும்.
அ) காலை 9.30 - பயிற்சி பதிவு செய்தல் மற்றும் இரண்டாவது கையேடு மற்றும் செயல்பாட்டு அட்டைகள் பெறுதல்.
ஆ) 9:40- 10.15 - கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தன்னார்வலர்கள் காட்சிப்படுத்துதல்.
ஆ) 10.15- 11.15 - கையேடு பாடங்கள் அறிமுகம்.
இ) 11.30-12.30 - புதிய செயல்பாடுகள் செய்து காட்டுதல்.
ஈ) 12.30- 1.30 - தன்னார்வலர்கள் தயாரித்த கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தன்னார்வலர்கள் மற்றும் பயிற்றுனர்கள் பார்வையிடுதல். இந்நிகழ்வின் பொழுது தன்னார்வலர்கள் கற்றல் உபகரணங்கள் குறித்து பிறருக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
உ) 1.30 - 2.00 மதிய உணவு இடைவேளை
ஊ) 2.00- 3.00 தன்னார்வலர்கள் புதிய கையேட்டில் இருந்து பாடங்களை எடுக்கும் மாதிரி வகுப்பறை.
எ) 3.00- 4.00 தன்னார்வலர்களின் அனுபவ பகிர்வு.
ஏ) 4.30 - சிறப்பாக காட்சிப்படுத்தி விளக்கமளித்த தன்னார்வலரை பாராட்டி பரிசளித்தல்
2) மேற்கண்ட பயிற்சி வகுப்புகள் மற்றும் கண்காட்சி நீண்ட செயல்பாடுகளை கொண்டிருப்பதால் தன்னார்வலர்கள் மதிய உணவினை வீட்டிலிருந்து எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதில் மாற்றுக் கருத்து தெரிவித்துள்ள தன்னார்வலர்கள் இதில் உள்ள இடர்பாடுகளை உணர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
3) பயிற்சி வகுப்புகளை விடுமுறை நாளில் அமைக்க வேண்டும் என்று விரும்பினால் அந்த கோரிக்கையை தங்களது ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார ஆசிரிய பயிற்றுனருக்கு தெரிவிக்கவும்.
4) இந்தப் பயிற்சி வகுப்பு மற்றும் கண்காட்சி உங்களது கற்றல் செயல்பாடுகளை மேலும் வலுவூட்டவும் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவும் மிகவும் அவசியம். எனவே இதில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.
தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
💐💐💐💐💐💐
க.இளம்பகவத்
சிறப்புப் பணி அலுவலர்,
இல்லம் தேடிக் கல்வி
No comments:
Post a Comment