ன்பார்ந்த தன்னார்வலர்களே!
தன்னார்வலர்கள் அனைவரும் மிகப்பெரிய கல்வியாளர்கள் வியக்கத்தக்க விதத்தில் அற்புதமாக செயல்பட்டு வருகிறீர்கள். இது வெறும் புகழ்ச்சி அல்ல உண்மை.!
தனித்தனியாக உள்ள தன்னார்வலர்கள் தங்களது செயல்பாடுகளை இணைய தளம் வழியாக மற்றவருக்கு பகிர்ந்து வருவது சிறப்பு.!
ஆனால், இணையதளம் வழியாக தங்களது கல்வி செயல்பாடுகளை பகிர்ந்து கொள்பவர்கள் மூன்றில் ஒரு பங்கு தன்னார்வலர்கள் மட்டுமே!மற்ற தன்னார்வலர்கள் ஏதோ சில காரணங்களால் இணைய முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு பிற தன்னார்வலர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்ற விவரம் தெரிய வாய்ப்பில்லை.
தன்னார்வலர்கள் செய்துள்ள கற்றல் கற்பித்தல் கருவிகள் (TLM) உண்மையில் வியக்க வைப்பதாக உள்ளன!
ஒவ்வொரு நாளும் நமது பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் தன்னார்வலர்கள் டெலிகிராம் குழுவில் பகிர்ந்துள்ள மிகச்சிறந்த கற்றல் செயல்பாடு கருவிகளை (TLM) நம் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் பிற துறை உயர் அலுவலர்களுடன் தவறாமல் பகிர்ந்து வருகிறார்.! நீங்கள் செய்யும் செயல்பாடுகளை கல்வித் துறையின் உயர் அலுவலர்கள் தினசரி பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.!
இந்த கற்றல் கற்பித்தல் கருவிகளையும் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் மாணவர்கள் செய்துள்ள அற்புதமான படைப்புகளையும் காட்சிப்படுத்தி மற்ற தன்னார்வலர்கள் உடன் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம்.
மேலும் இல்லம் தேடிக் கல்வி மையத்தை கடந்த ஒரு மாதமாக நடத்தும் பொழுது ஏற்பட்டுள்ள அனுபவங்களை மற்ற தன்னார்வலர்கள் உடன் பகிர்ந்து கொள்வதற்கும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை அனுபவமுள்ள ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து தெளிவு பெறுவதற்கும் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வட்டார வள மைய அளவில் 'கல்விக் கண்காட்சி' ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தன்னார்வலர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் 5 கி.மீ தூரத்திற்குள் அமைந்துள்ள வட்டார வள மையத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தன்னார்வலர்கள் தாங்கள் தயாரித்துள்ள கற்றல்-கற்பித்தல் கருவிகள், மாணவர்கள் செய்துள்ள மிகச்சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்தலாம். இதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசளித்து பாராட்டப்படும். இத்துடன் தன்னார்வலர்களின் அனுபவ பகிர்வு நடைபெறும்.
இல்லம் தேடிக் கல்வி தொடர்பான அடுத்த கையேடு தயாராகிவிட்டது! இவை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த முறை கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன் கையேடும், பல்வேறு செயல்பாட்டு அட்டைகள் மற்றும் சார்ட்டுகள் தன்னார்வலர் களுக்கு வழங்கப்படும்!
வட்டார வள மைய அளவில் நடைபெறும் கல்வி கண்காட்சியில் புதிய கையேடு குறித்த அறிமுக பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்விக் கண்காட்சிக்கு அனைத்து தன்னார்வலர்களும் வருகை புரிந்து அடுத்த பயிற்சி கையேடு மற்றும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் மற்றும் நாள் விவரங்களை தங்களுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிப்பார்கள்.
அன்புடன்,
க.இளம்பகவத்,
சிறப்பு பணி அலுவலர்,
இல்லம் தேடிக் கல்வி.
No comments:
Post a Comment