Educational Videos

Showing posts with label ESSAY. Show all posts
Showing posts with label ESSAY. Show all posts

Thursday, January 13, 2022

போகி பண்டிகை - நாட்டிற்கு அவசியமா? - உங்கள் கருத்து

                போகி பண்டிகை - நாட்டிற்கு அவசியமா?



 ஜனவரி 13 தமிழ் நாட்டில் அதாவது இறுதி நாள் அல்லது தை முதல் நாளுக்கு முந்திய நாள் சிறப்பாக போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.  இதன் வரலாறு என்ன? என்ன காரணம் சொல்லப்படுகிறது? என்பதைப்பற்றி நாம் இப்போது பேசாமல் இருக்க முடியாது. 


புத்தாண்டு என்றாலே புத்தாடை அணிந்து மகிழ்ந்து கொண்டாடுவோம் இன்றைய சூழலில் புத்தாண்டு என்றாலே ஆங்கில புத்தாண்டை நாம் சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்கிறோம்.  குறிப்பாக கிறிஸ்தவர்கள்  ஏசு கிறிஸ்து பிறப்பு தினம் அதற்கு அடுத்த வாரம் புத்தாண்டு தினம் எனும் இந்த இரண்டு தினங்களையும் இணைத்தே தங்கள் கொண்டாட்டங்களை திட்டமிடுவர் . இந்த கொண்டாட்டங்களில் புத்தாண்டு தினத்தை மட்டும் சிறிஸ்தவர் தவிர்த்து மற்றவர்கள் இன்றுவரை கொண்டாடி மகிழ்ந்து வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

அது போலவே ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பே தமிழர்கள் கொண்டாடி வந்த தமிழ் புத்தாண்டை நாம் கிராமப் புறங்களில் இன்று வரை கொண்டாடி வருவதை அறிவோம்,கிராமப் புறங்களில் இருந்து நகரப் புரங்கள் இடம் பெயர்ந்தவர்களும் தற்போது தாங்கள் வசிக்கும் நகரங்களிலும் கொண்டாடி வருவர் . 



                      
                                                            பழையன கழிதலும் புதியன புகுதலும்
                                                        வழுவல கால வகையி னானே.


என்று நன்னூல் கூறுவது என்னவென்றால் ஒன்றுக்கும் உதவாத பழைய பொருள்களை கழித்து புதிய பொருள்களை புகுத்த வேண்டும் . புதியதாக பிறக்கும் புத்தாண்டை நுகரும் போது நம் வீட்டில் புதிய பொருள்கள் இருப்பது ஒரு மகிழ்வான நிகழ்வே அதுதான் எதார்த்தம் என்கிறது நன்னூல். 
            ஆனால் பழையன கழித்தல் என்று கூறி வீட்டில் உள்ள பழைய பொருள்களை நடு  வீதியில் ,ஊரின் மத்தியில் போட்டு எரித்தல் என்பது எப்போது நம் தமிழ் கலாச்சாரத்தில் கலந்தது ?
            சங்க காலத்தில் நாம் பயன்படுத்திய பொருள்கள் ஏதும் இன்றைய கால பொருள்கள் போல்  பிளாஸ்டிக்,பல வேதிப்  பொருள்கள் ஆனது அல்ல அப்படி இருக்கையில்  எரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே கூறலாம். 
        
    இதிலிருந்து தெரிவது இந்த எரித்தல் என்ற செயல் நமது சமூகத்தில் இடையில் செருகப்பட்டது என்பதே உண்மை.

தினசரி போகி தலைநகரங்களில் 

            டெல்லி போன்ற தலைநகரங்களில் மக்கள் தொகை பெருக்கத்தால் சேரும் குப்பைகளாலும் ,அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளை எரிப்பதாலும்,வாகன பெருக்கத்தால் ஏற்படும் காற்றுமாசுபாடும் தினசரி போகியாக இருக்கும் இந்நாளில் சிறப்பு போகி பாண்டிகை வேறு கொண்டாடப் பட்டுக் கொண்டிருப்பது சுற்றுச் சூழலுக்கு பெரும் கேடாக அமையும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 

போகி நாட்டிற்கு அவசியம்  தானா?
                                                                   


        நம்மை போன்ற வளரும் நாடுகளுக்கு பல்வேறு வகைகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் பல்வேறு நெருக்கடிகள் இருக்கின்றது. அத்துடன் இந்த கொண்டாட்டமும் அமைந்துவிடக்கூடாது. எனவே போகி கொண்டாடுவோம் ஆனால் எதையும் எரிக்காமல்.
                👍பழைய பொருள்களை  மறுசுழற்சிக்கு உட்படுத்துவோம்.
                👍இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவோம். 
 
சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானதாக போகி பண்டிகையை மாற்றுவோம்.இதற்காக அரசு சட்டம் இயற்றவேண்டும் என நினைக்க வேண்டாம். நாம் மனது வைத்தால் எதுவும் நடக்கும்.

புவியை காக்க நம்மால் ஆனா உதவியை செய்வோம்.  
நாம் அனைவரும் மகிழ்வுடன் வாழ்வோம். 


    




              






கனவு ஆசிரியர் August 2025

                                                         கனவு ஆசிரியர் August 2025 Click above image and get the e-magazine