Educational Videos

Sunday, May 15, 2022

ஓவியப் போட்டி - உலக இடம்பெயரும் பறவை தினம் - மே 14,2022

World Migratory Bird Day - May 14,2022

Get More information just touch the above image

2022 ன் கருப்பொருள் 

 இடம் பெயரும் பறவைகளுக்காக உங்களின் பிரகாசமான விளக்குகளின் ஒளியை மங்கச்செய்யுங்கள்  
எதிரே வரும் மனிதர்கள் பயணிக்கும் வாகனத்திற்கே ஒளியை மங்கச்செயயாத மனிதர்களிடையே இந்த கருத்து எடுபடுமா? என்று எண்ணம் வேண்டாம் . பரவைகளுக்காக வேண்டும்போது கண்டிப்பாக மனிதர்களையும் நினைப்பார்.


    மே 14 அன்று காலை சரியாக 10 மணியளவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ECO club சார்பாக "உலக இடம்பெயரும் பறவை தினம்"பலவிதமான பறவைகளை வரையும் ஓவியப்போட்டி நடத்தி  சிறப்பாக கொண்டாடப்பட்டது. 26 மாணவ மாணவிகள் பள்ளி விடுமுறை விட்டபின்னும் ஆர்வமுடன் வந்து அற்புதமான தங்களது கலைத்திறமையை வண்ணமயமான ஓவியங்களை வரைந்து வெளிப்படுத்தி சென்றனர்.
 பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலையில் நடைபெற்ற போட்டியின் முடிவில் போட்டியின் மூலம் மாணவ,மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கி கூறினார்கள்.
பள்ளியின் ECO Club ஒருங்கிணைப்பாளர்,ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ். இடம்பெயரும் பறவை தினம் ஏன்கொண்டாடப்படுகிறது ?
இந்த ஆண்டின் கருப்பொருள் என்ன? என்பதை  குறித்த காணொளிக் காட்சிகளையும் ,விளக்கப் படங்களையும் காட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மாணவன் ரியாஸ் ,ஜனனி போன்றோர் தாங்கள் தெரிந்து கொண்டதையும் பெற்ற விழிப்புணர்வையும் மற்ற மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டனர். 
இறுதியாக மாணவர்களுக்கு BISCUIT வழங்கப்பட்டது .


நிகழ்வின் சில புகைப்படங்கள் 















No comments:

Post a Comment

கனவு ஆசிரியர் - February 2025

                                                        கனவு ஆசிரியர் February 2025 Click above image and get the e-magazine