Educational Videos

Sunday, October 24, 2021

இல்லம் தேடி கல்வி - தன்னார்வலர்கள் - பதிவேற்றம்

 

இல்லம் தேடி கல்வி 

பள்ளி மாணவர்கள் கடந்த 20 மாதங்களாக பள்ளியுடன் எந்தவொரு தொடர்பும் இன்றி ,சுதந்திரமாக சுற்றித் திரிந்து. தங்களது அனைத்து சிறுவயது ஆசைகள்,விளையாட்டுக்கள்,சேட்டைகள்  அனைத்தையும் ஆண்டு அனுபவித்து வந்திருப்பர் . தற்போது பள்ளி நீண்ட நாட்களுக்குப் பின் திறப்பதும்,தனது ஆசிரியர்களை அவர்கள் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் பார்ப்பதும். இருவருக்குமே ஒருவித மகிழ்ச்சி ,வெறுப்பு கலந்த மனநிலை ஏற்பட வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. தாம் இதுவரை கற்றதை முழுவதுமாக மறந்திருக்கிற சூழல் கண்டிப்பாக ஒரு சில மாணவர்களுக்கு இருக்கும்,அவர்களாகவே கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது . அவர்களது கற்றல் நின்றுவிடக்கூடாது என்பதற்காகவே  உருவாக்கப்பட்டது தான் 

"இல்லம்  தேடி கல்வி" 


இந்த இயக்கம் 

கண்டிப்பாக பள்ளிக்கும் சமுதயத்துக்கும் , 

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்,

ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் 

ஒரு இணைப்பு பலமாக சிறந்து விளங்கும் என்பதி சிறிதும் ஐயம் இல்லை. 

இந்த பதிவைப் பார்க்கும் அனைத்து ஆசிரியர் நண்பர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் +2,Degree படித்த இளைஞர்கள் ,இளம்பெண்களை உற்சாகப்படுத்தி கீழ் காணும் லிங்க் ல் பதிவு செய்யவும்,கருத்துக்களை பதிவிடவும் அறிவுறுத்தவும். மிக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரிவு செய்யப்படவிருக்கிறது. நாம் தயாராவோம் . 

நன்றி 


                தன்னார்வலர்கள் தங்கள் விருப்பத்தை அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவு செய்ய கீழ்காணும் படத்தை கிளிக் செய்யவும்.

இப்படிக்கு 
பா ஆனந்தராஜ் 
பட்டதாரி ஆசிரியர் 
வீதி வகுப்பறை 
அக்கச்சிப்பட்டி மையம் 
கந்தர்வக்கோட்டை 
புதுக்கோட்டை மாவட்டம் 


No comments:

Post a Comment

கனவு ஆசிரியர் - February 2025

                                                        கனவு ஆசிரியர் February 2025 Click above image and get the e-magazine