Educational Videos

Monday, December 13, 2021

29 வது அறிவியல் மாநாட்டில் வெற்றி -CEO பாராட்டு

                   இளம் விஞ்ஞானிகளுக்கும் வழிகாட்டி                                  ஆசிரியாருக்கும் CEO வாழ்த்து



 " மழை நீர் சேமிப்பில்" அறிவியல் ஆய்வு செய்து மாநில அளவில் தேர்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்  பள்ளி,அக்கச்சிப்பட்டி  மாணவர்களை  வாழ்த்துவோம். 


        லோகேஸ்வரன் மற்றும் சுப்ரியா ஆகிய இருவரும் வீணாகும் மழை நீரை எவ்வாறு பயனுள்ளவகையில்  சேமிப்பது மற்றும் பாதுகாப்பது என்பதை பற்றியான கேள்விகளின் தொகுப்பினால் நம் அக்கச்சிபட்டி  கிராமம் முழுவதும் சென்று மக்களிடம் கேள்விகள் மூலம் கிடைத்த பதில்களைக் கொண்டும் எவ்வாறு சேமிப்பது மற்றும் பாதுகாப்பது என்பதைப்பற்றி தங்களது வழிகாட்டி ஆசிரியர் திரு ரகமத்துல்லா அறிவியல் ஆசிரியர்  அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று இந்த ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்துள்ளனர். பள்ளியின் சார்பில் பல்வேறு தலைப்புகளில் 11 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் லோகேஸ்வரன் மற்றும் சுப்ரியா ஆகியோரின் கட்டுரை மாநில அளவில் தேர்வு பெற்றது நம் பள்ளிக்கும் ,பள்ளியின் மேல் அக்கறையுடன் இருக்கும் புரவலர்கள்,கல்வியாளர்கள்  , SMC ,ஊராட்சி மன்ற தலைவர்,தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள்  மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை . 

        மாநாட்டில் வெற்றி பெற்றோர் மற்றும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கும்  வழிகாட்டிய ஆசிரியர் அவர்களையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்கின்றோம். சென்ற ஆண்டினைப்  போன்றே இந்த ஆண்டும் 7 ம் வகுப்பு மாணவர்களே வெற்றி பெற்றது கூடுதல் சிறப்பு. 

        மாநாட்டின் அடுத்த நகர்வு மேட்டுப்பாளையம் , வனவியல் கல்லூரியில் டிசம்பர் 28,29 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. 

மேலும் படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்திகளை பார்க்க click செய்க 

1 comment: